கோவில் அறிமுகம்
நமது குலதெய்வக் கோவில் சேலம்
மாநகர் அருகே கோயமுத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காக்காபாளையம் அருகே
சேனைப்பாளையம் கிராமம், ராக்கிப்பட்டி பேருந்து நிறுத்தம்
அருகே அமைந்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல்,
திருச்சி எனப் பல மாவட்டத்தில் வாழும் 400 க்கும் மேற்பட்ட
பங்காளிகள் தலைக்கட்டு வரி செலுத்தி கோவிலின் அங்கத்தினர்களாக உள்ளனர்.
இது தேவாங்கர் குல திருநீறு
இடும் சங்கு மஹரிஷி கோத்திரம், குடிகேலார் வங்குசத்தாருக்கு மட்டும்
பாத்தியப்பட்ட கோவில் ஆகும். இந்தக் கோவிலின் பூஜை நடைமுறைகள், திருவிழாக்கள், மற்றும் அனைத்து உரிமைகளும் நமது
வங்குசத்தாருக்கு மட்டுமே சொந்தமாகும். கோவில் நிர்வாகக் கமிட்டியினரே இவை
அனைத்தையும் பொறுப்பேற்று செய்கின்றனர்.
1.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்
2.
நாமக்கல் மாவட்டம் பழைய பாளையம் அங்காள பரமேஸ்வரி
ஆலயம்
3.
பரமத்தி வேலூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயம்
4.
கொடுமுடி அருகில் உள்ள வெங்கம்பூர் அங்காள பரமேஸ்வரி
ஆலயம்
5. சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீவித்யாபாரதி பள்ளி வளாக அங்காள
பரமேஸ்வரி ஆலயம்
6.
எடப்பாடி அருகே கல்வடங்கம் அங்காள பரமேஸ்வரி ஆலயம்
7.
உள்ளிட்ட ஏழு அங்காள பரமேஸ்வரி
அம்மன் கோவில்களின் புற்று மண் எடுத்து வந்து அவற்றின் வடிவாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
மூலவராக அங்காள
பரமேஸ்வரி,
சர்வ லட்சணங்களும் பொருந்திய சாந்த சொரூபியாக கத்தி, சூலம், நாகபாசம் கூடிய உடுக்கை, குங்குமக் கிண்ணம் ஆகியவை ஏந்தி மங்கள ரூபிணியாக காட்சி அளிக்கிறாள்.
அம்மனின் எதிரே மகாமண்டபத்தில் சிம்ம வாகனம், பலி பீடம்,
சூலம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவில்
கர்ப்பக்கிரகம் அர்த்த மண்டம், மகாமண்டபம், பிராகாரம்,
மற்றும் சமையல் கூடம்
ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.
பிரகாரத்தில்
கருவறைக்கு பின்புறம் வில்வமரத்தடியில் சிவனும், தனிக்கோவில்களில்
கன்னிமூலையில் கணபதியும், வாயுமூலையில் முருகனும்
தென்கிழக்கில் சப்த கன்னியரும் தனிக் கோவில்களில் அருள் புரிகின்றனர். சரஸ்வதி,
பார்வதி, மகாலஷ்மி, விஷ்ணு
துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக அருள்புரிகின்றனர்.
முக்கியக்
கோவிலுக்கு வடக்குப் புறத்தில் பெரியநாயகி அம்மன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக