பூஜைகள்


பூஜைகளும்  விழாக்களும்



நித்ய பூஜைகள்

கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் 7 மணிவரை

தினமும் அம்மனுக்கு திரிகால பூஜை நடக்கிறது.

பூஜை நேரங்கள்:

காலை 9 மணி
மதியம் 12 மணி
மாலை  6 மணி

சிறப்புப் பூஜைகள்

அமாவாசை பூஜை:

அமாவாசை அன்று உச்சிப் பொழுதில் சிறப்பு அபிஷேகப் பூசை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. பெரிய நாயகி அம்மனுக்கும் பூசை செய்யப்படுகிறது.

பௌர்ணமி பூஜை:

பௌர்ணமி அன்று மாலை பூர்ண சந்திரன் உதிக்கும் நேரத்தில் சிறப்பு அபிஷேகப் பூசை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. பெரிய நாயகி அம்மனுக்கும் பூசை செய்யப்படுகிறது.

நவராத்திரி பூஜைகள்:

நவராத்திரி காலத்தில் கோவிலில் சிறிய அளவில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. மூலவர், சப்த கன்னியர், விஷ்ணு துர்க்கை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்புப் பூசையும் செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி:

விநாயகர் சதுர்த்தி அன்று தனிக் கோவிலில் அமைந்திருக்கும் கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.


தைப்பூசம்:

தைப்பூச நாளில் தனிக் கோவிலில் அமைந்திருக்கும் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம்:

பங்குனி உத்தர நாளில் தனிக் கோவிலில் அமைந்திருக்கும் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம்:

கார்த்திகை தீபம் அன்று மாலை தனிக் கோவிலில் அமைந்திருக்கும் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. மாலை ஆறு மணிக்கு மேல் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மஹா சிவராத்திரி திருவிழா

வருடா வருடம் மாசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று மஹா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா முழுநாள் விழாவாக நடக்கிறது. அதி காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்படுகின்றன.

காலை 9:00 மணி அளவில் மஹா சக்தி அழைப்பு சேனைப்பாளையம் பாட்டப்பன் கோவிலில் இருந்து அம்மன் கோவிலுக்கு நடைபெறுகிறது. சக்தி அழைப்பு நடந்த பின் அபிஷேகமும் மஹா ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அதே சமயத்தில் விநாயகர், சிவன், முருகன், விஷ்ணு துர்க்கை ஆகியோருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்ப்டுகின்றன.

சப்த கன்னியர் பூசை பெண்மக்களுக்கானது ஆகும். நமது குலத்துப் பெண்மக்கள் சப்த கன்னியருக்கு சிறப்புப் பூசைகள் செய்கின்றனர்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் மகாமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. பெரிய நாயகி அம்மனுக்கும் தனிப்பூசை செய்யப்படுகிறது. நமது பங்காளிகள் அனைவரும் தவறாமல் பூசையில் கலந்து கொள்கின்றனர்.

அனைத்துப் பூசைகளுக்கும் பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

மறுநாள் அமாவாசை அன்று மதியம் உச்சிப் பொழுதில் சிறப்பு அபிஷேகப் பூசை நடத்தப்படுகிறது. பெரிய நாயகி அம்மனுக்கும் அலங்காரப் பூசை செய்யப்படுகிறது அன்றும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக