வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

அங்காள பரமேஸ்வரி மந்திரங்கள்






அருள்மிகு அங்காள பரமேஸ்வரி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ஆதி சக்தி ச வித்மஹே
அங்காளபரமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே
சிவ பத்னிச தீமஹி
தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத்

ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வ ரூபாயை தீமஹி
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்


அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வழிபாட்டு ஸ்லோகம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோபகவதி
அங்காளபரமேஸ்வரி ஏஹியேஹி
ஸகல சௌபாக்யம் மே தேஹி தேஹி
சகல கார்ய ஸித்திம்
குரு குரு ஓம் நமஹ் ஸ்வாஹா.

செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு மனதுடன் அங்காளியை மேலே உள்ள சுலோகத்தை 18 முறை கூறி, பானகத்தை நிவேதித்து மனதார வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் கிடைக்கும்.

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வழிபாட்டு மந்திரம்

ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம்
ஜ்வாலாகேசாம் கராளம் ச தக்ஷிணே நகர குண்டலாம் |
வாமகர்ணே பத்ரபூஷாம் ஸர்வாபரண பூஷிதாம்
பாசசூல கபாலோக்ர டங்க ஹேதி விராஜிதாம்
பீதாம்பராம் வ்ருஷாரூடாம் அங்காள பரமேஸ்வரீம்
வந்தே சதுர்புஜாம் உக்ராம் குங்குமாபாம் சுபப்ரதாம் ||

ஒரு முகமும் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையவள்; அக்கினிச் ஜ்வாலை போன்று சிவந்த கூந்தலை மகுடமாகக் கொண்டவள்; பயங்கரி; வலது செவியில் முதலை வடிவில் அமைந்த குண்டலத்தையும், இடது செவியில் தாமரை போன்ற பத்ர குண்டலத்தையும் அணிந்தவள்; எல்லா அணிகலன்களும் பூண்டவள்; பாசக் கயிறு, சூலம், கபாலம், உளி அல்லது கோடாரி, ஹேதி என்ற கூர்மையான ஆயுதம் தாங்கியவள்; வெண்பட்டாடை உடுத்தியவள்; காளை மேல் வீற்றிருப்பவள்; குங்குமப்பூ நிறத்தினள்; நலன்களை வழங்குபவள் - ஆகிய அங்காள பரமேஸ்வரியை வணங்குகிறேன்.

ஜெய் அங்காளி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக