தேவாங்கர்களுக்கு
காயத்ரி தேவி மிக முக்கியமான தெய்வம்
ஆவார். பிரம்ம தேவனின் பஞ்ச சக்திகள்
1. துர்கா தேவி 2. ராதா
தேவி 3. இலட்சுமி தேவி 4.
சரஸ்வதி தேவி 5. சாவித்திரி தேவி
இவர்களின் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடமைகள்
பிரம்ம தேவனால் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
சாவித்திரி தேவி உயிர்களின் தாய்,
வேதங்கள், சந்தஸ்ஸீ, சந்தியா
வந்தன மந்திரம், தந்திர
சாஸ்திரங்கள் இவற்றிக்கெல்லாம் தாய்.
பிரும்ம சக்திக்கு அதிஸ்டான தேவதையாகவும் விளங்குபவள் அவளது பாதத்துளியால்
உலகமெல்லாம் தூய்மை அடைகிறது
தேவர்களால் பூஜிக்கப்படும் தேவாங்க முனிவர் பூணூலுக்கென
ஓர் அதிதெய்வம் வேண்டும் என்ற எண்ணத்தின் உந்துதலால், பஞ்ச சக்திகளில் ஒருவரான இந்த
சாவித்திரி தேவியை மூன்று பாதம் உடைய
காயத்ரி தேவியாக மாற்றினார்.
மனிதரின் கண்டஸ்தானத்தில் பூணூல் வடிவில் நீ
தேகத்தில் தங்கி நீ விளங்க வேண்டும். இதுவே
உன் இருப்பிடம் என்று காயத்ரி தேவியிடம் அருளினார். அன்று முதல் பூணூலின் மூன்று
முடிச்சிற்கேற்ப மூன்று பாதங்கள் உள்ளவள் ஆனாள்
சாவித்திரி தேவியே காயத்ரி தேவியானதால்,
காயத்ரி தேவி வேதங்களின் தாய். உலகைப் புனிதமாக்குபவள். இந்தக்
காயத்ரியே விஞ்ஞானம் எனப்படுகிறது.
தேவாங்கர்கள் அனைவரும் தவறாது பூணூல் அணிய
வேண்டும். பூணூல் வடிவிலே காயத்ரி தேவியே நமது உடம்பில் தங்கியிருப்பதாக அர்த்தம்.
மந்திரத்தில்
மகாமந்திரம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரம் தேவாங்கர்களுக்கு அதிக உரிமை
உண்டு ஏன்?
காயத்ரி
மந்திரத்தில் வேதங்கள் அனைத்தும் அடக்கம். பல விதமான மந்திரங்களை எல்லாம்
சேர்த்துக் கூறினால் என்ன பலன் ஏற்படுமோ அந்த பலன் காயத்ரி மந்திரத்தைச் சொன்னால்
ஏற்படும். எனவே தான் இது மகா மந்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இம் மந்திரத்தை
உபதேசித்தவர் தேவல மகரிஷி ஆவார். ஆகவே நம் தேவாங்கர்களுக்கு அதிக உரிமை உண்டு.
காயத்ரீ மகா
மந்திரம் :-
ஓம் பூர் புவ ஸூவ தத்ஸ விதுர்வ ரேண்யம்
பர்கோ தேவஸ்ய
தீமஹீ
தி யோ யோ ந
ப்ரசோதயாத்
முழு பொருள்.
பரப்பிரமம்மான மூவுலகையும்
காக்கின்ற சக்தியான அந்த ஜோதி ஸ்வரூபத்தை வணங்குகிறேன். பேரொளியாக அனைத்திலும்
நிறைந்த அந்த ஜோதி ஸ்வரூப சக்தி எனது
புத்தியினை நல்வழியில் தூண்டட்டும். [அறிவை விரிவடைய செய்யட்டும்] என்பதாகும்.
தேவாங்கர்கள் சுப
காரியங்களை தொடங்கும் முன் கங்கணம் கட்டுவது ஏன்?
முதன் முதலில் தேவலர் தறியில் அமர்ந்து துணிகளை
நெய்ய ஆரம்பிக்கும் முன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனை தியானித்தார். அம்மனும் அவர் முன் தோன்றி தன் கையில் இருந்த நவரத்ன
கங்கணத்தை தேவலரின் கரத்தில் அணிவித்து "இனி எந்த காரியத்தையும் சுலபமாக
முடிக்கும் ஆற்றலை பெறுவாய்" என்று ஆசீர்வதித்து மறைந்தார்.
இதனை
மனதில் கொண்டுத்தான் அனைத்து சுப காரியங்களுக்கும். ஆரம்பிக்கும் முன் அம்மனை நினைத்து கங்கணம்
கட்டிக்கொள்கிறோம். கங்கணம் கட்டிக்கொண்டு ஆரம்பிக்கும் செயல்களுக்கு எந்த இடையூறும் ஏற்ப்படாது.
தேவாங்க குலத்தவர்கள் பூணூல் அணிவது ஏன்?
1.
பிராமணத் தன்மை,
வைதீக காரியங்களுக்கு அனுமதி, சகல நன்மைகள்,
மற்றும் ஆத்மாவை பக்குவப்படுத்துவது போன்றவைகள் ஏற்படும்.
2.
மனம்,
வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும்
நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். மனித குணங்களான சத்வ, ராஜஷ,
தாமஸ குணங்களை ஞாபகபடுத்துகிறது.
3.
தன் முன்னோர்களுக்கும்,
குருவிற்கும், தன் குடும்பத்தார்களுக்கும்,
தெய்வங்களுக்கும் செய்யும் கடமைகளை தனக்கு நினைவு படுத்தவும்.
காயத்ரீ மந்திரம் சொல்லக்கூடிய தகுதிக்காகவும் பூணூல் அணிய படுகிறது.
சிவபெருமானின்
நெற்றி கண்ணில் இருந்து வந்த தேவலர், தான்
தோன்றும் போதே பூணூல் அணிந்தபடி இருந்ததாக வரலாறு. இதனால் தேவாங்கர்கள் உபநயனம்
என்று தனியே சடங்குகள் செய்யாமல் பிறந்ததில் இருந்தே பூணூல் அணியும் தகுதியைப்
பெறுகின்றனர். அதன் காரணமாகவும் அவர் வழியில் வந்த தேவாங்கர்கள் பூணூல்
அணிகின்றனர்.
ஒவ்வொரு
முடிச்சிலும் மூன்று நுல்கள். மூன்று முடுச்சுகளைச் சேர்த்து ஒன்பது நூல் கொண்டதாக
போட்டுக்கொள்வது பூணூல். பூணூல் முடிச்சுகளை பிரம்ம முடிச்சு என்று சொல்வதுண்டு.
பூணூல்
வடிவிலே மூன்று பாதங்களுடைய காயத்ரீ தேவியே நமது உடம்பில் தங்கியிருப்பதாக
அர்த்தம்.
பூணூல் அணியும்
முறைகள் என்ன?
தேவாங்கர்
குல மக்கள் வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில்
பூணூல் நோன்பு என்று வைத்து பழைய பூணூலை மாற்றி,
புதுப் பூணூல் அணிகிறார்கள். பிராமணர்கள், வைஸ்சியர்கள். மற்ற
ஜாதியினர் திருவோண நட்சத்திரத்திற்கு அடுத்து
வரும் அவிட்ட நட்சத்திரத்தில் பூணூல் மாற்றும் நோன்பு வைத்து
கொள்கிறார்கள்.
பூணூல்
அணிந்திருப்பவர்கள் தினமும் சந்தியா வந்தனம் மந்திரம் சொல்ல வேண்டும்.
தேவாங்கர்களின் முதல் தோன்றலான தேவலர் யோனி பிறப்பில்லாத நெற்றிக் கண்ணிலிருந்து
வந்த நேரடி பிறப்பாதலால். தேவாங்கர்களுக்கு சந்தியாவந்தனம் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை என்று சொல்லப்படுகிறது.
பூணூலை அணியும் போது குருவின் உபதேசம்
பெற்று அணிய வேண்டும். முடியாத பட்சத்தில் அதற்கான
மந்திரங்களை சொல்லி அணிய வேண்டும்.
பூணூல் அணியும்
போது சொல்லும் மந்திரம்
ஓம் சுக்லாம்
பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன
வதனம் தியாகே
குருப்ரம்ஹ குரூர்விஷ்ணு குருதேவோ
மஹேஷ்வரஹ
குருசாட்சாத் பரப்ரம்ஹ
தஸ்மைஸ்ரீ குருவே நமஹ
யக்ஞோபவீதம்
பரமம் பவித்ரம்
ப்ரஜோபதேர்யத்
சகஜம் புரஸ்தாத்
ஆயுஷ்ய
மஹர்யம் ப்ரதிமுஞ்ச சுப்ரம்
யக்ஞோபவீதம்
பலமஸ் துதேஜ.
பழைய பூணூலை
கழற்றும் போது சொல்லும் மந்திரம்
உபவீதம் பின்ன
தந்தும் ஜீர்ணம் கஸ்மல
தூஷிதம்
விஸ்ரு ஜாமிபுனர்
பிரஹ்மன் வர்ச்சோ தீர்க்காயு
ரஸ்துமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக