பெருவிழா


அறுபதும் கூடி வணங்குதல்




கோவிலின் ஆகம விதிப்படி அறுபதும் கூடி வணங்குதல் திருவிழா குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மாசி மஹா சிவராத்திரி அன்று கொண்டாடப்படும்.


வழக்கமாகக் கொண்டாடப்படும் மாசி மஹா சிவராத்திரி பூசை வழக்கம் போல பகல் நேரத்தில் நடத்தப்படும். கணபதி ஹோமம், சக்தி அழைப்பு, மஹா அபிஷேக ஆராதனைகள் பெரிய நாயகி அம்மன் சிறப்புப் பூசை ஆகியவை சிறப்புடன் செய்யப்படும். பெருவிழாவின் சிறப்புப் பகுதியாக அன்று நள்ளிரவு பெரியநாயகி அம்மன் மற்றும் கருப்பண்ண சுவாமி ஆகியோருக்கு முப்பூசை நடத்தப்படும்.


மஹாசிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். நள்ளிரவு பெரிய நாயகி அம்மனுக்கு பம்பைகள், கொம்புகள் ஒலிக்க சிறப்புப் பூசைகள் செய்யப்படும். பின்பு அம்மனின் காவலரான கருப்பண்ணசாமிக்கு முப்பலி பூசைகள் நடத்தப்பட்டு அன்னதானம் செய்யப்படும்.


அறுபதும் கூடி வணங்குதலை கோவில் நிர்வாகமும், குலப் பெரியவர்களும் கூடி முடிவு செய்வார்கள்.


2008 முதல் உருவம் அமைத்து மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக 60-ம் கூடி வணங்கும் பெருவிழாவினை நடத்தினார்கள்.


2017 இல் கும்பாபிசேகம் நடந்த போது பெரியநாயகி அம்மனுக்கு புது உருவம் அமைக்கப்பட்டதால்  2017ஆம் ஆண்டு 60-ம் கூடி வணங்கும் பெருவிழா நடத்தப்பட்டது. அடுத்த பெருவிழா எப்பொழுது நடைபெறும் என்பதைக் கோவில் கமிட்டியார் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக