சிலர்
எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. மேலும்,
வேலை வாய்ப்புகளும் அமையாது. பணமும் பாழாகும். இத்தகைய தோல்விகளால்
பலரும் துவண்டு போய் விடுவார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே!
எப்படிப்பட்ட
ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் செய்யப்படும்
பரிகாரத்துக்கு உண்டு.
ஈஸ்வரி
பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு
வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்தவள் என்று கருதப்படுகின்றனர். குறிப்பாக அங்காள
பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.
தொடர்ந்து
27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10
மணிக்குள் அதாவது சனி ஹோரையில், 18 எலுமிச்சம் பழங்களால்
ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள்
குங்குமம் இட்டு படைத்து, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால்,
தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும்.
நினைத்த காரியம் கைகூடும்.
இந்த
பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி `அங்காள
பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!'
என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும். இதனால் தோல்வி தோஷம் அடியோடு
நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக