வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

சிவகுருநாதனுக்கு ஆசிரியப்பா


சிவகுருநாதனுக்கு ஆசிரியப்பா






முருகனை முக்கண் முதல்வன் குருத்தினைமால்

மருகனை வள்ளி மனங்கவர் விருத்தனை
வேடனை விண்ணோர் குறைதீர் வேலனைச்செங்
கோடனை குறுநகை தருமருள் பாலனை
வீரனை வேந்தனை வெற்றிக் குமரனை
சூரனை யழித்த சிறுவனை அமரனை
கந்தனை கடம்பனை கானமயில் வாகனனை
வந்தனை செய்திடும் சிந்தனை சுகமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக