சாங்கியாயன மகரிஷி கோத்ர வங்குசங்கள்
குடகோலதவரு - குடிகேலாரு :- குடகோலதவரு என்னும் பெயர்தான் குடிகேலாரு என மருவி வழங்கப்படுகின்றது. ரம்பம் போல் இருக்கும் வளைந்த நெல்லரிவாளுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல என்றும் பெயர். இவர்கள் செல்வந்தர்களாக நில புலன்கள் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கின்றனர்.
உம்மிடிதவரு :- ஆந்திராவில் உள்ள உம்மிடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கற்பூரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கும், மற்ற ஆலயங்களுக்கும் கற்பூரம் கொடுக்கும் தொண்டு செய்தவர்.
கொண்டவன்தவரு :- இருமலைகளுக்கு இடையே இருக்கும் மலைவளைவுகள் சந்துகள் இவற்றினுக்குக் கொண்டவன் என்று பெயர். இவ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
செங்கல்வதவரு :- பூசனைக்குக் குறிப்பாக செங்கல்வ மலர்களைப் பயன்படுத்துபவர்.
மோஹனதவரு :- பாசம் மிகுந்தவர், அன்பு கொண்டவர்.
பூரணயதவரு :- இவ்வம்சத்தில் பூரணய்யா என்பவர் புகழ் பெற்று இருந்து இருக்கலாம். அவருடைய வம்சம்.
ஏறத்தாழ அனைத்து கிருஹ சூத்திரங்களிலும் தர்ப்பணங்களின் போது திருப்தி செய்யப்படும் பிரம்மன், தேவர்கள், பிரஜாபதிகள், சப்தரிஷிகளுக்கு அடுத்தபடியாக வரும் முக்கிய முனிவர்களில் ஒருவராக சாங்கியாயனர் சொல்லப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக