வரலாறு


கோவில்  வரலாறு




குடிகேலார் வம்சத்தவர் சேலம், நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி என பல மாவட்டங்களிலும் பரவி இருக்கின்றனர். இவர்கள் பல ஸ்தலங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களில் தலைக்கட்டு வரி செலுத்தி வணங்கி வந்தனர். பலபட்டறைக் கோவில்களில் இவர்கள் தலைக்கட்டுக்களாக இணைந்திருந்தனர்.

சேலம் மாநகரத்தைச் சார்ந்த குடிகேலார் வம்ச பெருமக்கள் பலப்பல ஆண்டுகளாகவே சிறு குழுவாக வழிபாடு நடத்தி வழிபட்டு வந்தார். 

பலரும் அறிந்து 1961 ஆம் ஆண்டு சேலத்தில் நமது பங்காளிகள் சுண்ணாம்புக்காரத் தெருவில் 60-ம் கூடி வணங்கும் பெருவிழாவினை நடத்தினார்கள்.

அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நமது பங்காளிகள் சுண்ணாம்புக்காரத் தெருவில் 60-ம் கூடி வணங்கும் பெருவிழாவினை நடத்தினார்கள்.

மூன்றாம் முறையாக 1981 இல் சேலம் அருகே கமலாபுரத்தில் ஒரு தோட்டத்தில் (தற்பொழுது ஸ்ரீ வித்யாபாரதி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள இடத்தில்) 60-ம் கூடி வணங்கும் பெருவிழாவினை நடத்தினார்கள்.

அதன் பின் 1984 முதல் 2002 வரை சேலம் லைன்மேடு, தேவாங்க மஹாஜன கல்யாண மண்டபத்தில்  வருடாவருடம் சிவராத்திரி அன்று சிவராத்திரி பூஜைகளை நடத்தி வந்தனர். 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு சில சிக்கல்களினால் மண்டபத்தில் இடம் கிடைக்காத காரணத்தினால் சில ஆண்டுகள் வழிபாடு தடைபட்டது.

1998 மார்ச் 9 ஆம் தேதி (ஈஸ்வர ஆண்டு, மாசி 25 ஆம் நாள்) P.K. குமாரசாமி செட்டியார் தலைமையில் 14 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அலுவலகம் திரு. S. சுப்ரமணியம், 7, மாரியம்மன் கோவில் தெரு எண் 5, சஞ்சீவராயன் பேட்டை, சேலம் – 636006 என்ற முகவரியில் இயங்கி வந்தது.

1998 ஆம் வருடம் மார்ச் 12 ஆம் தேதி, (ஈஸ்வர ஆண்டு, மாசி 28 ஆம் நாள்) சேலம் மாவட்டம் சேனைப்பாளையம் கிராமத்தில், ராக்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் கோவில் அமைந்துள்ள இடத்தில் 0.58 சென்ட் நிலம் டிரஸ்டிற்காகப் பதிவு செய்யப்பட்டது.

2002 ஆம் வருடம், ஜூன் 5 ஆம் தேதி (சித்ரபானு வருஷம், வைகாசி 22 ஆம் தேதி) 6.75 செண்ட் நிலம் P.K. பழனிச்சாமி செட்டியார் அவர்களால் வாங்கி அளிக்கப்பட்டது.

முதல் கும்பாபிஷேகம்

இப்படி வாங்கப்பட்ட நிலத்தில் நமது வங்குசப் பங்காளிகளின் பங்களிப்புடன் சிறப்புடன் கருவறை, அர்த்த மண்டபம் மற்று விநாயகர், முருகன், சப்த கன்னியருக்குமான தனிக் கோவில் கட்டப்பட்டு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் (தாரண வருஷம் கார்த்திகை மாதம் 30 ஆம் நாள்) பூர்ண கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அக்காலத்தில் கோவில் பணிகளில் முன் நின்றவர்கள்

P.K. பழனிச்சாமி செட்டியார் – தலைவர்
G. சுப்ரமணிய செட்டியார் – உபதலைவர்
S. சுப்ரமணிய செட்டியார் – காரியதரிசி
K. நாகராஜ் – உபகாரியதரிசி
K. விஸ்வநாதன் – உபகாரியதரிசி
Dr. V.V. நடராஜன் – உபகாரியதரிசி
G. தண்டபாணி – உபகாரியதரிசி
A. அமிர்தலிங்கம் – உபகாரியதரிசி
K.V. அர்த்தனாரிசாமி – உபகாரியதரிசி
K.S. சோமசுந்தரம் – உபகாரியதரிசி


பிற கட்டுமானங்கள்

02-06-2011 அன்று (கர வருடம், வைகாசி 29 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை சமையல் கூடம் கட்டி முடிக்கப்பட்டு சிறப்புப் பூசைகளுடன்  திறக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெரிய நாயகி அம்மனுக்கு  நிழல் தரும் இரும்புக் கூரையும் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டது.

மகாமண்டபம்

15-12-2013 (ஸ்ரீ விஜய வருஷம் கார்த்திகை மாதம் 29 ஆம் நாள்) அன்று பல பங்காளிகளின் பங்களிப்புடன் மகாமண்டபம் கட்டப்பட்டு கிரஹப் பிரவேசம் செய்யப்பட்டது.

அஷ்டபந்தன புனருத்தாரண  மஹா கும்பாபிசேகம்

09-02-2017 அன்று (துன்முகி வருடம் தை மாதம் 27 ஆம் தேதி, கோவிலில் மராமத்துகள் செய்யப்பட்டு, புதிய மடப்பள்ளி, மகாமண்டபத்தின் முன் நிழல் கூரை, மற்றும் பக்தர்களுக்கான கூடுதல் வசதிகள் கட்டப்பட்டு அஷ்டபந்தன புனருத்தாரண  மஹா கும்பாபிசேகம் சிறப்புடன் நடத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக