சௌடேஸ்வரி நவமணி மாலை
வழங்கியவர்: சித்திரகவி கி. பிள்ளார் செட்டி
மாணிக்கம் நீலமுடன் மரகதமும் ஒளிவீசும்
ஆணிப்பொன் னாசனத்தில் அழகியமா முடிதரித்து
பார்மேவும் சீர்பதும ராகத்தால் மேகலையும்
கோமேதகம் விளங்கும் கொலுசுகளும் தானணிந்து
வைடூர்யப் பொட்டணிந்து முத்துப்புல் லாக்கணிந்து
வைரம்போல் மின்னிடுமோர் வடிவாளைக் கைபிடித்து
பவளவாய்ச் சிரிப்போடு பக்தர்களைப் பார்த்தருளி
அவனிதனைக் காத்தருளும் அம்பிகையே! வாருமம்மா!
சௌடாம்பி கைத்தாயே! சௌக்கியத்தைத் தாருமம்மா!
மௌலிய ணிந்தவளே! மங்கலத்தைத் தாருமம்மா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக