வியாழன், 7 பிப்ரவரி, 2019

துதி


அங்காள பரமேஸ்வரி துதி






ஓர்முகம் முக்கண் சதுர்புஜம்
     ஓங்குச டையக்னி செம்பவள ரூபிணி
சீர்வெண் பொற்றுகில் பூரணி
     சர்வா லங்கார கார்முகில் காருணி
கூர்மிகும் வாள்சூல பாசவுடுக்
     கைகாபா லதாரி ணியரிமா வாகினி
பார்புகழ் கைலாயன் பாகினி
      பார்வதி அங்காளி பதம்பணிந் தேனே



ஒரு முகமும், மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையவள்; அக்கினித் தணல் போன்று உயர்ந்த சிவந்த கூந்தலைக் கொண்டவள்; செம்பவளம் போன்ற சிவந்த நிறம் கொண்டவள்;

பொன் வேலைப்பாடுகள் கூடிய வெண்பட்டாடை அணிந்தவள்; அனைத்திலும் பூரணத்துவம் தருபவள்; சகல அலங்காரங்களும் அணிகலன்களும் பூண்டவள்; கருத்த மழைமேகம் போன்ற கருணையைக் கொண்டவள்;

கூர்மையான வாள், திரிசூலம், கபாலம், பாசக் கயிறு, உடுக்கை ஆகியவற்றைத் தன் கைகளில் தரித்தவள்; சிம்மத்தை தன் வாகனமாகக் கொண்டவள்;

உலகத்தோர் எல்லாம் போற்றும் கைலாயநாதனாகிய சிவனின் ஒரு பாகமாக இருப்பவளாகிய பார்வதியின் வடிவமான அங்காள பரமேஸ்வரி அன்னையின் பாதங்களை வணங்குகின்றேன்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக